கண்ணை இமை காப்பதுபோல்
கருத்துடன் காப்பாள் அன்னை,
ஈரைந்து மாதங்கள் கடந்தால்
தன் மடியில் தாளமிடபோகும்,
தவக்கொழுந்தை எண்ணித்
தவமிருப்பாள் அன்னை.
முதல் மூன்று மாதங்களில்
சோர்வின் உட்சத்தில்
தன்னிலையை இழப்பால் - ஆனால்
தன் பிள்ளையின் உருவம்;
மூலையில் இருந்து முதுகெலும்பு,
மற்றும் கை, கால்கள் வரை
மூன்று அங்குலமாக துளிர்த்து,
சின்னஞ்சிறு இதயம் துடிப்பதை,
அல்ட்ராசவுண்டில் கண்டு
ஆனந்தம் அடைவாள் அன்னை.
இரெண்டாவது மூன்று மாதங்களில்
அசௌகரியம் சற்றே அகல;
சிசுவின் உறுப்புகள் முழுவளர்ச்சி பெற்று,
செவியுணர்வும், விழுங்கும் திறனும் கொண்டு,
பதினான்கு அங்குலமாய் பரிணாம வளர்ச்சி பெற்று,
வளைந்து நெளிவதை கண்டு,
புத்துணர்வுடன் பூரிப்பால் அன்னை.
இருதி மூன்று மாதங்களில்
இருபத்தியொரு அங்குலமாய் வளர்ந்து,
பூவுலகைக் காண,
உருண்டு புரண்டு உதைக்கும்
சிசுவின் ஆரவாரம் கண்டு
மெய்சிலிர்ப்பாள் அன்னை.
அறிவும், அழகும், ஆரோகியாமும்
நிறைத்த மகவாய் அவதரிக்க
அனுதினமும் ஆண்டவனிடம் வேண்டுவாள் அன்னை.
பிள்ளைபேரில் மறுபிறவி எடுப்பினும்,
பிள்ளை முகம் கண்டவுடன்
பிறவி பயன் பெற்றாட் போல்
பேரானந்தம் கொள்வாள் அன்னை.
தாய்மை, தாயின் தனிச்சிறப்பு;
இயற்கையின் படைப்பு,
இணையில்லா ஈர்ப்பு!
அகிலத்தில் உள்ள அணைத்து
தாயும் சேயும் நலமுடன் வாழ,
எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்!!
வாழ்க,வளமுடன்! வாழ்க,வையகம்!!
No comments:
Post a Comment