கடல் கடந்து,
காரியசித்தியின் பொருட்டு,
கணினியின் துணை கொண்டு சென்றாலும்;
விண்ணை தொடும் பிரமாண்ட மாளிகைகளும்,
கண்ணை கவரும் காட்சிப்பொருட்களும்,
மனதை வருடும் இயற்கை சுழலும்,
ரம்யாமாகத் தோன்றினாலும்;
எனது நினைவலை முழுவதும் நிறைந்திருப்பது;
என் செல்லப்பிள்ளைகளின் சேட்டைகளே.
அவர்களை காணும் நன்நாளே,
எமது விடியல்!
No comments:
Post a Comment