என்ற பழமொழி யானைக்கு மட்டும் அல்ல பனைக்கும் பொருந்தும்.
பறந்த பராமரிப்பற்ற அழுக்கு நிலத்தையும்
விதைத்த சில திங்களில்,
கவர்ச்சியான வனப்பகுதிக்கு வல்லமையுடையது.
அழகு மாளிகையின் முகப்பில் அலங்காரமாகவும்;
அடர்ந்த கானகத்தில் கம்பிரமாகவும்;
தொட்டுப்பார்க்கும் உயரத்திலும்;
தொடமுடிய உச்சியைக்கொண்டும்
வீற்றிருக்குமாம் பனை!
இளவேனில், முதுவேனில், கார், குளிர், முன்பனி, பின்பனி
போன்ற ஆறு பருவங்களிலும்,
அதீத பாங்கோ, நிறைந்த நீரோ தேவையில்லை,
இலையுதிர் காலத்தில் துப்புரவின் தொல்லையும் இல்லை,
சுட்டெரிக்கும் சூரியனை சுகமாக்கி;
வறட்சி தங்கி வானுயர வளர வல்லது.
அடிமரத்திலிருந்து குருத்துவரை
அணைந்து அங்கங்களும் பயனளிக்கும்.
செதுக்கிய குருதிலிருந்து துளி துளியாக
வழியும் நீர் பதனியாக மண்பானையில் அடைக்கலம் புகும்.
அதிகாலையில் தரையிறக்கி,
காய்ச்சிய பதனி ஊட்டச்சத்து மிகுந்த கருப்பட்டியாகும்.
இள நொங்கு கோடையில் இணையில்லா குளிர்பானம்;
அது கணிந்தபின் சுட்டுச்சுவைக்கும் பனம்பழம்,
பனம்பழத்தினின்று பிரியும் நார் நல் கயிராகும்,
பனங்கொட்டையின் பருப்பு எண்ணெயாகும்,
புவியில் பதியமிட்ட பனங்கொட்டை நார்ச்சத்துள்ள பனங்கிழங்காகும்.
முதிர்ந்த மரம்
உறுதியான குச்சியாக மாறி;
அடுக்குமாடி கட்டடத்திற்கு முட்டாகும்.
பழமைவாய்ந்த பனைமரத்தின் பாரம்பரியத்தை போற்றுவோம்!